யாழ் பல்கலையில் திருக்குறள் தேர்வு!

யாழ்ப்பாணத்தில்உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ் தமிழ்ச்சங்கத்தினால் திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது.
குறித்த தேர்விற்காக 740 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் பரீட்சையின் போது 650 பேர் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழ்ச்சங்க தேர்வு மேற்பார்வை அணியினருடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள் 24 பேர் நோக்குநர்களாக பங்கேற்றனர்.
எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் பெறுபேறுகள் தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் (www.thamilsangam.org) வெளியிடப்படும் என்று தேர்வு இணைப்பாளர் கு.பாலஷண்முகன் தெரிவித்தார்.
Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை பிரதமர்!
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக தங்காலை பழைய சிறைச்சாலை - வெளியா...
இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல் தொற்று - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|