யாழ். பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு!

இவ்வாண்டுக்கான பசுமையான எதிர்காலத்தை நோக்கி சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களின் பிரசன்னத்துடனும், இலங்கையின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடத்தி வரும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில், 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாட்டின் கருப் பொருளாக, ‘முழு உலகினதும் முக்கிய கவனத்தை ஈர்த்திருக்கக் கூடியதும் ஆய்வாளர்களின் தேடலுக்கு களம் சமைத்திருப்பதுமான’ “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” என்ற களத்தை இம்முறை தேர்வு செய்திருக்கிறது.
உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும், சவால்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சூழல் குறித்த பிரக்ஞைகளின் பால் தனது தேடலை அமைத்திருக்கும் இந்த ஆய்வு மாநாடு, கடந்த காலங்களில் பசுமைச் சூழலிருந்து விலகிச் சென்றமைக்கான காரணங்களைத் தேடும் அதே வேளை, இன்றைய நிலையில் பசுமைத் தேவையின் அவசியங்களை நோக்கி மானுட சமூத்தை நகர்த்திச் செல்லும் முயற்சிகளுக்கு இந்த ஆய்வு மாநாடு கவனம் செலுத்தவிருக்கின்றது. வெவ்வேறு துறைகள் சார்ந்தும் சூழல் குறித்த கரிசனங்களை தனது ஆய்வுப் பகுதிக்குள் உள்ளடக்கியிருப்பது இந்த மாநாட்டின் சிறப்பாகும்.
இந்த வகையில் மானுடவியல் மற்றும் நுண்கலைகள், விளையாட்டு விஞ்ஞானம், தூய விஞ்ஞானம், வர்த்தகம், முகாமைத்துவம், மற்றும் தொழில்வான்மை, விவசாயம் மற்றும் உணவு விஞ்ஞானம், கல்வி, பொறியியல், சுகாதாரம், மற்றும் மருத்துவம், சமூக விஞ்ஞானம், மற்றும் பிராந்திய விஞ்ஞானம், உயிரியல், மற்றும் சூழல் விஞ்ஞானம், தகவல் விஞ்ஞானம், மற்றும் தொழினுடபம், ஆகிய துறைகளினூடாக பசுமையான எதிர்காலத்தை நோக்கிய ஆய்வரங்குகள் இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளன.
Related posts:
|
|