யாழ். பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சைகள் டிசம்பர் 5 ஆரம்பம்!

Saturday, November 28th, 2020

யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் வணிகத்தில் மூன்றாம் தேர்வு முதலாம் அரையாண்டு பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்ட பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இம்மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் முகாமைத்துவச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, குறித்த பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதிமுதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: