யாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

Monday, February 13th, 2017

யாழ்.பல்கலைக்கழகத்தின் 1ஆம் வருட மாணவி ஒருவர் அவரது பூட்டிய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவல்கட்டு ஆனைக்கோட்டை பகுதியினை சேர்ந்த கணேசமூர்த்தி பிரசன்னா (வயது-22) என்ற மாணவியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பொலிஸார், சடலத்தினை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதேச அறையில் வைத்துள்ளனர். மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் மரண விசாரணைனளை மேற்கொண்டதுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தி அதன் மருத்துவ அறிக்கையினை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

body_found

Related posts: