யாழ். பல்கலைக்கழகத்தில் வீதி விபத்து விழிப்புணர்வுக் கவனயீர்ப்புப் போராட்டம்!

Monday, October 10th, 2016

வடபகுதியில் வீதி விபத்துக்களால் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தடுக்க வலியுறுத்தி யாழ். போதனாவைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை(19) முற்பகல் -10 மணி தொடக்கம் 11 மணி வரை ‘எழுந்து நிற்போம்’ எனும் தொனிப் பொருளில் வீதி விபத்துத் தொடர்பான விழிப்புணர்வுக்  கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு பாதாதைகளைத் தாங்கி அமைதியான கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து “அதிகரித்து வரும் வீதி விபத்துக்களும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளும்” எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்துரைகளும் இடம்பெற்றது

unnamed

Related posts: