யாழ். நுணாவிலில் தனியார் பேருந்து- டிப்பர் வாகனம் மோதி விபத்து

Tuesday, May 16th, 2017

யாழ். நுணாவில் வைரவர் கோவில் சந்திக்கு அருகாமையில் யாழிலிருந்து வவுனியாவுக்குப் பயணித்த தனியார் பேருந்தொன்றும், டிப்பர் வாகனமும் மோதியதில் சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தின் சாரதி நுணாவில் வைரவர் கோவில் சந்தியால் டிப்பர் வாகனத்தைத் திருப்ப முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் தனியார் பேருந்துக்குச் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து இரு வாகனச் சாரதிகளிடையே இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாகப் பேருந்தில் சென்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. இதனால் வேலைக்குச் சென்ற உத்தியோகத்தர்கள் மாற்றுப் பேருந்துகளை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் பதற்றத்தை தணித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: