யாழ்.நீதிவான் நீதிமன்றில் பக்தருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்.நீதிவான் நீதிமன்ற வழக்கிற்கு ஐயப்ப விரதம் கடைப்பிடித்த ஒருவர் முன்னிலையாகிய போது அவருடைய ஆடைகள் தொடர்பில்கண்டித்த நீதிமன்றம் மன்றைவிட்டு வெளியேறுமாறு பணித்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற பொலிஸாரை அழைத்து இவ்வாறான நபர்களை நீதிமன்றுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மன்றுகட்டளையிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கறுப்பு நிற உடை அணிந்து வருவோர் மற்றும் ஐயப்ப சுவாமி விரதம் கடைப்பிடிப்போர்யாழ்.நீதிவான் நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் நீதிமன்றின் கட்டளைக்கு அமைய இந்த நடைமுறைபின்பற்றப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விரதம் கடைப்பிடிக்கும் போது கறுப்பு நிற ஆடைகளை அணிவதுடன், கறுப்பு நிற சால்வையை கழுத்தில் சுற்றி, கால்களில்செருப்பின்றி விரதத்தை பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெல் கொள்வனவை நிறுத்தியது கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம்!
சீரற்ற காலநிலை : 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
நீண்ட நாள்களுக்கு பின்னர் யாழ்- காங்கேசன்துறை - வவுனியா இடையேயான தினசரி புகைரத சேவை ஆரம்பம்!
|
|