யாழ். நாவாந்துறைப்  பகுதியில் ஊடகவியலாளரொருவரின்  வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகள் திருட்டு 

Thursday, August 10th, 2017
யாழ். நாவாந்துறைப்  பகுதியில் ஊடகவியலாளரொருவரின்  வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(08) இரவு- 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்டப் பிராந்திய ஊடகவியலாளரொருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து மேற்படி தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts: