யாழ். நவக்கிரியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ். நவக்கிரி நிலாவரைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் வீட்டில் யாருமில்லாத வேளையிலேயே தூக்கில் தொங்கியுள்ளார். சம்பவத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேயிடத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை லோகேந்திரன்(வயது-45) என்பவரே தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
Related posts:
பளையில் விடுதிக்கு சீல் வைப்பு!
உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெர...
விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குங்கள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவ...
|
|