யாழ். நகர பழக்கடைகளில் சுகாதாரப் பிரிவு திடீர் சோதனை!

Tuesday, June 12th, 2018

யாழ் மாநகரப் பிரதேசத்தில் உள்ள பழக்கடைகள் மீது சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பழ வகைகளின் சீசன் ஆரம்பித்த நிலையில் பழவகைகள் தாராளமாக விற்கப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து சுகாதார பிரிவினர் நகரில் உள்ள பழக்கடைகள், சந்தைகள் போன்றவற்றில் பழவகைகள் சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை நகரில் உள்ள பழக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டன. அழுகிய, பழுதடைந்த பழங்கள் விற்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் நடவடிக்கையில் சகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் இரசாயன மருந்து விசிறப்பட்டு பழுக்க வைத்த மாம்பழங்களே கூடுதலாக விற்கப்பட்டு வருவதாக நுகர்வோர் தெரிவித்தனர். இவ் இரசாயன மருந்து விசிறப்பட்டு பழுக்க வைத்த மாம்பழங்களை உணவுக்கு பயன்படுத்துவதால் நோய்த்தாக்கம் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

Related posts: