யாழ் நகர் உணவகமொன்றுக்குச் சீல்!
Friday, December 21st, 2018
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கியது என்ற குற்றச்சாட்டில் உணவகம் ஒன்றை மூடிச் சீல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கை நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட பின் உணவகத்தை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் யாழ் நகர்ப் பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது அங்கு பல குறைபாடுகள் இருந்தமையை அவதானித்துள்ளார்.
இதையடுத்து உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து உணவகம் சம்பந்தமான அறிக்கை சுகாதாரப் பரிசோதகரால் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் வரை உணவகத்தை மூடிச் சீல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Related posts:
பேருந்து -முச்சக்கரவண்டி விபத்து – பேருந்து தீக்கிரை!
வரும் புதனன்று ETCA மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை !
இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயார் – ஜப்பான் அரசாங்கம் அறிவிப்பு!
|
|