யாழ்.நகர்ப் பகுதியிலுள்ள உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வர்த்தகர்கள் கோரிக்கை!

Tuesday, January 10th, 2017

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட நகர்ப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் சுகாதாரம் சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாமையினால் வர்த்தகர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாநகர சபையினால் 312 வர்த்தக நிலையங்கள் யாழ்.நகரில் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றும் மாதமொன்றிற்கு  யாழ் மாநகர சபைக்கு மாதாந்தம்  பற்று நிதி வழங்கி வருவதோடு, சோலை வரியினையும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பொது மலசலகூடம் இன்மையாலும்,வடிகான்கள் உரிய முறைப்படி சுத்திகரிக்கப்படாமையினாலும் வர்த்தகர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வர்த்தகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

View_of_Jaffna_town

Related posts: