யாழ். நகரில் நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு: துரித நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

யாழ்.நகரிலும், அதனை அண்டிய கரையோரப் பகுதிகளிலும் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் குழந்தைகள், சிறுவர்கள்,முதியவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
வடிகால் கழிவு நீரிலிருந்தே இந்த நுளம்புகள் பெருக்கமடைந்து மக்களின் குடியிருப்புக்களை முற்றுகையிடுகின்றன. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நுளம்புக் கடிக்கு மக்கள் அதிகளவில் இலக்காகின்றனர்.
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியில் நுளம்பின் பெருக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகவே, அதிகரித்துள்ள நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகர சபை துரிதமான நடவடிக்கைகளை செயற்படுத்த முன் வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related posts:
வான்வெளியில் இரவு நேர முகாம் அமைக்க இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்!
கிளிநொச்சியில் தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழப்பு!
உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை வைத்திருக்க தடை - பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் அற...
|
|