யாழ். நகரப் பகுதியிலுள்ள பழக் கடைகளில் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன!

Tuesday, July 5th, 2016

யாழ். நகரப் பகுதியிலுள்ள பழக் கடைகள் மீது சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்புக்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது றம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழ வகைகளின் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்தே அழுகிய றம்புட்டான் பழங்கள்,மற்றும் விற்பனைக்குப் பொருத்தமில்லாத  பழக் கடைகளை யாழ்.மாநகர சுகாதாரப் பிரிவினர்  கண்காணித்துச் சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பாவனைக்குதவாத பழ விற்பனையில் ஈடுபடும் வியாபார உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

Related posts: