யாழ். சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் அடுத்தடுத்து இரு கடைகள் உடைத்துத் திருட்டு!

Friday, November 18th, 2016

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கடும் மழை அடுத்தடுத்து இரு கடைகள் உடைக்கப்பட்டுப் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், உணவகம் ஆகியவையே இவ்வாறு உடைத்துத் திருடப்பட்டுள்ளன.

சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அருகாமையில் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் இயங்கி வரும் உணவகத்தின் முன் கதவையுடைத்து உள்நுழைந்த திருடர்கள் பிஸ்கற் வகைகள், மைலோ பைக்கற்றுக்கள்,சோடாப் போத்தல்கள் உட்படப் பெறுமதியான பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு திருட்டுப் போயுள்ள பொருட்களின் பெறுமதி சுமார்-50 ஆயிரம் எனவும், அத்துடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார்-25 ஆயிரம் ரூபா பணமும் திருட்டுப் போயுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் பால் மா, உழுத்தம் பருப்பு உட்படப் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் முன்கதவுடைத்துத் திருடப்பட்டுள்ளன.

மேற்படி இருசம்பவங்கள் தொடர்பாகவும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed (1)

Related posts: