யாழ்.சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பண்டிகைப் பொருட்கள்!

யாழ்.சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு தைப்பொங்கல் பண்டிகைப் பொருட்களை வழங்கியது இந்து மா மன்றம். நேற்று பிற்பகல் நல்லை ஆதின முதல்வர் தலைமையில் இந்து மாமன்றத்தின் உறுப்பினர்கள் மூவர் யாழ்.சிறைச்சாலைக்கு சென்று குறித்த அரசியற் கைதிகளுக்கு பண்டிகைப் பொருட்களை வழங்கியுள்ளனர். இச் சந்திப்பின் போது அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து சென்ற குழுவினரிடம் கவலை வெளியீட்டுள்ளதுடன் தமது விடுதலைக்கு சகலரையும் விரைந்து தீர்வுக்காக வலியுறுத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசியற் கைதிகளின் கோரிக்கைகளை செவிமடுத்த இந்துமா மன்ற குழுவினர் அரசியற் கைதிகளின் விடுதலை குறித்து செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான ஆக்கபூர்வமாக அழுத்தங்களை தாம் வழங்குவோம் என உறுதியளித்துள்ளதாகவும் அரசியற் கைதிகளின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|