யாழ். சிறைச்சாலையில் கைபேசிகள் மீட்பு!

Sunday, April 24th, 2016

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 18இற்கு மேற்பட்ட அலைபேசிகளும் சிறுதொகை கஞ்சா பொதி மற்றும் மதுசார குப்பிகள் சிலவும் கைப்பற்றபட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.எம்.என்.சி.தனசிங்கே தெரிவித்துள்ளார்..

சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்தாகவும் இத்தேடுதல் நடவடிக்கை இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: