யாழ். சாவகச்சேரியில் வீடு புகுந்த மர்மக் கும்பல் சரமாரி வாள்வெட்டு!

swort1 Wednesday, September 13th, 2017
யாழ். சாவகச்சேரி கிராம்புவில் பகுதியிலுள்ள  வீடொன்றுக்குள் நேற்று (12) இரவு புகுந்த மர்மக் கும்பல் சராமரியாக வாள்களால் வெட்டியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
கடும் மழை பெய்து கொண்டிருந்த இரவு வேளையில் மோட்டார்ச் சைக்கிள்களில்  வந்த 12 பேர் கொண்ட குழு வாள்களுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளது.
மேற்படி நபர்கள் வாள்களுடன்  வருவதைக் கண்டதும் வீட்டிலிருந்தவர்கள் திருடர்கள்…திருடர்கள்…. என உரத்துச் சத்தமிட்டுள்ளனர். அவ்வேளை வீட்டிற்கு வெளியே வந்த இளைஞன் மீது குறித்த மர்மக் கும்பல் சரமாரி வாள்வெட்டு நடாத்தியுள்ளது.
இதனைத் தடுக்க வந்த சகோதரி மீதும், சத்தம் கேட்டு ஓடி வந்த அயல் வீட்டு இளைஞன் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் சுஜீவன்(வயது-30) அவரது சகோதரியான  பரமேஸ்வரன் சுஜித்தா(வயது-27) மற்றும் ஜெயரத்தினம் சிறிராஜ்(வயது-30) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சுஜீவன் மேலதிக சிகிச்சைகளுக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுத்தமான குடிநீர் வேண்டி ரொசல்ல கிராம பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தில் வீதி விபத்து விழிப்புணர்வுக் கவனயீர்ப்புப் போராட்டம்!
நிர்ணய விலையில் பொருட்களை விற்று சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் யாழ்.வணிகர் கழகம் அறிவுறுத்து!
இலத்திரனியல் தொழில் நுட்பத்துடன் புதிய கொன்சியூலர் பிரிவு !
பேச்சுவார்த்தை வெற்றி - தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு!