யாழ். கொட்டடி பகுதியில் வாள்வெட்டு – தம்பதிகள் வைத்தியசாலையில் !

Wednesday, June 21st, 2017

யாழ். கொட்டடி வில்லூன்றி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதலில் அதேபகுதியை சேர்ந்த 77 வயதான கந்தசாமி சாம்பசிவம் மற்றும் வரது மனைவியான சாம்பசிவம் சறோஜினிதேவி ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். திருட்டு நோக்கில் இனந்தெரியாதவர்கள் வீட்டினுள் நுழைந்த போது அவர்களை தடுக்க முற்பட்ட தம்பதியினர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: