யாழ். கொக்குவிலில் வாள்வெட்டுக் குழு அட்டாகாசம்: சீ .சீ. ரி.விக் கமராவின் உதவியுடன் விசாரணை தீவிரம் 

Monday, October 2nd, 2017

மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் குழு யாழ். கொக்குவில் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்று மீது தாக்குதல் நடாத்திச் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. நேற்று(01) இரவு-08.30 மணியளவில் இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
மூன்று மோட்டார்ச் சைக்கிள்களில் தங்கள் முகங்களை மறைத்தவாறு  வந்த ஐந்து பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு கொக்குவில் சந்திப்பகுதியில் அமைந்திருந்த வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதலை நடாத்தியது. வர்த்தகநிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்ச் சைக்கிளையும் உடைத்துச் சேதமாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
ஆபத்தை விளைவிக்கும் வாள்கள், கோடாரிகளுடன் குறித்த குழு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகினறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந் நிலையில் மேற்படி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ. ரி.விக் கமராவில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சியின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts:


சிறுமிகள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில்...
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...
உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்த...