யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை(28) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், இளவாலையின் ஒரு பகுதி, ஆலடி, மெய்கண்டான், சேந்தாங்குளம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், ஆலடி, கருங்காலி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வலி.வடக்கில் முதல்கட்டமாக 800 வீடுகள்!
தெற்கின் பிரச்சினை பற்றியும் வடக்கு அரசியல்வாதிகள் பேச வேண்டும்: வடக்கின் ஆளுநர்!
அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் - விசேட ஆய்வொன்றை முன்னெடுக்கும...
|
|