யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(13) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கைமின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வீமன் காமம், தையிட்டி,வறுத்தலை விளான், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை,கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு,கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சட்டவிரோத மின்சாரம் பெற்றோர் கைது!
சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு - ஆலை உரிமையாளர்களுக்கு நெல் விநியோகிக்க அரசாங்கம் முடிவு!
முழுவதுமாக மறைக்கும் தலைக்கவசத்தின் இடைக்காலத் தடை நீடிப்பு!
|
|