யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின் தடை!
Wednesday, October 19th, 2016மின் விநியோக மார்க்கங்கள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (20) காலை- 08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வல்வெட்டித் துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர் மலை, பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கணைச் சந்தி, உடுப்பிட்டி வி.சி. நாச்சிமார் கோவிலடி, இலந்தைக் காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா வடக்கு ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை தேர்வு!
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – இராஜாங்க அம...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்...
|
|