யாழ்.கீரிமலை கடலில் 19 வயது இளைஞன் பலி!

Wednesday, October 6th, 2021

யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த  போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தட்டாதெருவை சேர்ந்த 19 வயதுடைய சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் இளைஞனே காணாமல் போன நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்காக கீரிமலைக்கு சென்று இருந்ததாகவும் , கிரியைகளை முடித்துக்கொண்டு,  கீரிமலை கடலில்  நீராடிக்கொண்டு இருந்த வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்து நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - பொலிஸ் ஊடகப் பேச்சா...
நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்...
முறைப்பாடு அளித்தால் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சர...