யாழ். கலைஞர்களின் தயாரிப்பில் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” திரைப்படம்!

சினிமா வரலாற்றில் ஈழத்துக் கலைஞர்களை மாத்திரம் கொண்டு யாழ்ப்பாணத்தின் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமான “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” முழு நீளத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(02-10-2016) திரையிடப்படவுள்ளது.
முதற்கட்டமாக யாழ் ராஜா-2 திரையரங்கில் சிறப்பு VIP காட்சிகள் மற்றும் சாதாரண காட்சிகளாகக் காண்பிக்கப்படவுள்ளது. முதற் காட்சி காலை- 10 மணிக்கும், இரண்டாவது காட்சி பிற்பகல்-2 மணிக்கும் காண்பிக்கப்படும் எனப் படத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் சிறப்புக்காட்சிகள் காண்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
பெரிய வெங்காயத்துக்கான தீர்வை அதிகரிப்பு!
அதிகளவில் தற்கொலை செய்யும் ஆண்கள்!
எதிர்வரும் 23ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம்!
|
|