யாழ்.கந்தரோடையில் ஐம்பதாயிரம் ரூபா பணம் திருட்டு!

Wednesday, November 16th, 2016

யாழ்.கந்தரோடைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கந்தரோடையில் இயங்கி வரும் உணவக உரிமையாளரொருவரது வீட்டிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி திருட்டுச் சம்பவம் தொடர்பாகப்  பணம் திருட்டுப் போயுள்ள வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

homewwwt

Related posts: