யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஜப்பான் பயணமானார்!

Tuesday, December 13th, 2016

ஆசிய நாட்டு இளைஞர்களுக்கான விஞ்ஞான விரிவாக்க செயற்திட்டத்தினூடாக (asian high school students japan asia youth exchange programme in science) யப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அழைப்பின் பேரில் 2016இல் புலமைப் பரிசில் பெற்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த ஒரே ஒரு தமிழ் மாணவன் நிமலன் பிருந்தாபன் (தரம் 12 உயிரியல் பிரிவு) யப்பான் பயணமாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 11இல் முதன்மை மாணவனாகிய இவர் க.பொ.த (சா/த) தரப்பிரிவில் 2015ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 jaffna-hindhu1-600x363

Related posts: