யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் கதக் நடனம் புதிய பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

யாழ். இந்திய துணைத்தூதரக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியக் கலைக்கூடத்தில் கதக் நடனம் (Kathak Dance) கற்க ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
புதிய பிரிவுகள் எதிர்வரும் ஏப்ரல்-1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மேற்படி பாடநெறியில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழே கேட்கப்பட்டுள்ள விபரங்களை cgi.jaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 021-222-0503 எனும் தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும் . பெயர், வயது மற்றும் மேலதிக தொடர்புகளுக்கான உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது செல்லிடத் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் மார்ச் மாதம்- 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும்.
Related posts:
கைதி படுகொலை வழக்கு சந்தேகநபர் ஒருவர் சாட்சியை மிரட்டியதாக முறையீடு!
மின்சாரத் துண்டிப்பு தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!
எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு?
|
|