யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு 

Friday, May 26th, 2017

யாழ். அச்சுவேலி கதிரிப்பாய்ப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அச்சுவேலி கதிரிப்பாய்ப் பகுதியில் வர்த்தக நிலையமொன்றினை நாடாத்தி வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை(24) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மல்லாகம் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி கிறிஸ்தோபர் விசாரணைகளை மேற்கொண்டார்.  இதேயிடத்தைகிசேர்ந்த சு. தூபதீபன்(வயது-32) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

Related posts: