யாழ்ப்பாண மூதாதையர்கள் வரலாறு தொடர்பாக தவறான பதிவு குறித்து வடக்கு அமைச்சுக்கு எதுவுமே தெரியாதாம்; சொல்கின்றார் வடக்கு மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர்!

Capture-214 copy Thursday, January 12th, 2017

டச்சுக்காரர்களின் ஆட்சியில் புகையிலை விற்பனைக்காக வந்தவர்களே யாழ்ப்பாணத்தின் மூதாதையர்கள் என்று சுற்றுலா அமைச்சின் இணையத்தில் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில், எமக்கு எதுவுமே தெரியாது என்று வடக்கு மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுற்றுலா அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இலங்கையின் 25 மாவட்ட வரலாறுகள் தொடர்பிலும் அவை தொடர்பான சுற்றுலா முக்கியத்துவமும் பதிவிடப்பட்டுள்ளன. அவ்வாறான பதிவில் யாழ்ப்பாணத்தின் மூதாதையர்கள் டச்சுக் காலத்தில் புகையிலை வியாபாரத்துக்காக வந்ததாகப் பதிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில வடக்கு மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாவது,

குறித்த விடயம் நேரடியாக கொழும்பு அமைச்சினாலேயே பதிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவிடப்பட்டமை தொடர்பில் கருத்து அதில் இல்லை. இக் கருத்துத் தவறானது என்பதனைச் சுட்டிக்காட்டி அதற்கான சரியான தகவல்கள் அனுப்ப ஆவன செய்யப்படும். வடக்கு மாகாண சுற்றுலா அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சகல மாவட்ட விவரங்களையும் உள்ளடக்கி ஓர் சுற்றுலா வழிகாட்டி வெளியிடப்படும் என்றார்.

Capture-214 copy


பிள்ளை விளையாட ஆமை பிடித்துக்கொடுத்தவருக்கு 100 மணிநேர சீர்திருத்த பணியிலீடுபடுமாறு நீதவான் உத்தரவு!
இலங்கை போக்குவரத்து சபையின் கடன்தொகை 16,000 மில்லியனாக அதிகரிப்பு!
தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் –டில்ஷான்!
நுகர்வோர் அதிகார சபைக்கு அபராத தொகையில் மட்டும் 9 கோடி வருமானம்!
பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - தமிழ் அரசியல் கைதிகள்!
2018-01-18 09.41.30

வீணைச் சின்னம் என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான சின்னம்!…