யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில்!

யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.
யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது ஆலயத்தினுள்அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.
உலகம் முழுவதும் இன்றைய தினம் நத்தார் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஏற்கனவே பல நாடுகளில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|