யாழ்ப்பாண நீதிவான் மன்றின் அறிவித்தல்!

Wednesday, December 7th, 2016

யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருள்களில் உடமையாளர்களால் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் உள்ள சான்றுப் பொருட்களை வரும் 6 மாத காலப்பகுதிக்குள் அலுவலக நேரங்களில் உரிய ஆவணங்களுடன் சமுகமளித்து அடையாளம் காட்டிப் பெற்றுக்கொள்ளுமாறு மன்றின் பதிவாளர் அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றப் பதிவாளரால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் 30ஆம் திகதி பி/436/15இபி/441/15,பி/442/15 என்ற வழக்கு இலக்கங்களில் யாழ்பொலிஸாரால் மன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருள்கள் இதுவரை கோரப்படாத நிலையில் உள்ளன. எனவே குறித்த சான்றுப் பொருள்களை உரிமை கோருபவர்கள் எவரம் இருப்பின் 6மாத காலப்பகுதிக்குள் அலுவலக நேரங்களில் உரிய ஆவணங்களுடன் சமுகமளித்து உரிய கோரிக்கையை நிலை நாட்டும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டக் கொவையின் 431(2) இன் பிரகாரம் இத்தால் பகிரங்கப்படுத்தப்படுகின்றது.

யாழ்.பொலிஸாரால் மன்றில் பாரப்படுத்தப்பட்ட சான்றுப் பொருள்களான துவிச்சக்கர வண்டிகள் தொடர்பான விவரம்:

இலக்கம் இல்லாத லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கர வண்டி எல்.ஏ1412963 லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கர வண்டி இலக்கம் இல்லாத பெண்கள் துவிச்சக்கர வண்டி, இலக்கம் இல்லாத பெண்கள் துவிச்சக்கர வண்டி, 69797473 லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கரவண்டி, 4எல் 756400 லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கரவண்டி, இலக்கமில்லாத லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கரவண்டி, 55906995 இலக்க லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கரவண்டி, 69341913 இலக்கமுடைய லுமாலா வர்க்க துவிச்சக்கரவண்டி 69585825 இலக்கமுடைய லுமாலா வர்க்க துவிச்சக்கரவண்டி, இலக்கமில்லாத துவிச்சக்கர வண்டி, 57156333 லுமாலா வர்க்க துவிச் சக்கரவண்டி, என்.பி.எம்.என். 5746 இலக்க கொண்டா வர்க்க மோட்டார் சைக்கிள் – என்றுள்ளது.

court 5465465d

Related posts: