யாழ்ப்பாண நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்திகரிப்பு!

யாழ்ப்பாண நகரில் உள்ள கழிவு நீர் வழிந்தோடும் வடிகால் வாய்கள் ஆணையாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுத்திகரிக்கப்படுகின்றன.
கடந்த இரண்டு நாள்களாக துப்புரவு செய்யும் பணிகள் இடம்பெற்றன. வடிகால் வாய்களுக்குள் சிலர் சீமெந்து கற்கள் மற்றும் கழிவுகளைப் போட்டதால் வடிகால் ஊடான வழிந்தோடும் கழிவுநீர் தடைப்பட்டது.
கழிவுநீர் தேங்கியதால் அதனுள் சேறுகள், கழிவுகளும் அதிகமாகக் காணப்பட்டன. நகரில் கே.கே.எஸ் வீதி, கஸ்தூரியார் வீதி போன்ற இடங்களில் ஊடாகச் செல்லும் வடிகால் வாய்களிலேயே இப்படியான சம்பவங்கள் காணப்பட்டதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
கழிவுநீர் வழிந்தோடுவது தடைப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். கழிவுகளை அகற்றுவதில் மாநகர சுத்திகரிப்பு பணியாளர்களும் சிரமப்படுகின்றனர். எனவே இவ்வாறான கழிவுகளை வடிகால் வாய்களுக்குள் கொட்ட வேண்டாம் என்றும் மாநகர ஆணையாளர் கேட்டுள்ளார்.
நகரில் உள்ள கழிவுநீர் வழிந்தோடும் வடிகால் வாய்களைப் பாதுகாப்பது அதனைப் பராமரிப்பது சகலரினதும் கடமையாகும். இவ்வாறான கழிவுநீர் தடைப்படுவதால் நகர் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படும்.
Related posts:
|
|