யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலுள்ள அயலுறவுச் செயலகத்தில் சுமார் 100 விண்ணப்பங்கள் ஒருவார காலத்திற்குள்!

Tuesday, February 7th, 2017

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அயலுறவுச் செயலகத்தில் 100ற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. வெளிநாடுகளில் இறந்த உறவினர்களின் உடல்களை இங்கு கொண்டு வருதவற்கான விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

வெளிநாடு செல்வோர் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், சத்தியக் கடதாசிகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளனர். 100இற்கும் மேற்பட்ட உறுப்படுத்தல் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. ஆபிரிக்காவில் இறந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் உடலை இங்கு கொண்டு வருவதற்கான விண்ணப்பமும் கிடைத்துள்ளன. அதேபோன்று வேறு நாடுகளில் இறந்த இருவரின் உடல்களைக் கொண்டு வருவதற்கான விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகின்றன.

kachcherey-district-1

Related posts: