யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் முதலாம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் !
Tuesday, June 27th, 2017யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் எதிர்வரும்-2018 ஆம் ஆண்டில் தரம்-01 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளது.
எனவே, இதற்குரிய விண்ணப்பப் படிவங்களைக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு அலுவலகத்தில் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பிக்குமாறு கல்லூரி அதிபர் கேட்டுள்ளார்.
குறித்த விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களையும் இணைத்து இந்த மாதம்- 30 ஆம் திகதிக்கு முன்னதாகக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் ஒப்படைக்க வேண்டும் எனவும், குறித்த திகதியின் பின்னர் ஒப்படைக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் கல்லூரி அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து திட்டமிடப்பட்ட மின்தடை குறைக்கப்படலாம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...
இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து - இந்திய வெளிவிவகார அமைச்சர் தெர...
இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடு – பொதுப் ப...
|
|