யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு புதிய எஸ்.எஸ்.பி!

Saturday, October 7th, 2017

யாழ்ப்பாணம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகராக ஈ.எம்.யூ.விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமான இடத்துக்கே விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹற்றன் மூத்த பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் ஆணைக்குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது

Related posts: