யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் ப. ராஜேஸ்வரன் எழுதிய ‘கல்வியியலாளன்’ ஆய்வு நூலின் வெளியீட்டு!

Tuesday, April 5th, 2016

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் ப. ராஜேஸ்வரன் எழுதிய ‘கல்வியியலாளன்’ ஆய்வு நூலின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை( 04-) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் யாழ். பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி-ஜெயலட்சுமி ராசநாயகம் விருந்தினராகக் கலந்து கொண்டு நாடா வெட்டி நூலைச்  சம்பிராதயபூர்வமாக வெளியிட்டு வைத்தார். வாழ்த்துரையை பேராசிரியர் ம. சின்னத்தம்பி வழங்கியதுடன், நூலின் மதிப்பீட்டுரையை யாழ். பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் தலைவர் தி. வேல்நம்பி நிகழ்த்தினார்.

நூலின் முதற்பிரதிகளை யாழ். பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி-ஜெயலட்சுமி ராசநாயகம் பிரபல தொழிலதிபர் சி. சண்முகானந்தன், பிரபல ஆசிரியர் வே. அன்பழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம், யாழ். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர்கள் எனப் பலரும் பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறான ஆய்வு நூலை இந்த வருடம் முதல் வருடத்திற்கு இரண்டு தடவை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்த நூலாசிரியர் கல்வித் துறை சார்ந்த ஆய்வாளர்கள் இதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் அனைவரும் நன்மை பெரும் வகையில் விரிவுரையாளரொருவரால் வெளியிடப்பட்ட பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையில் வெளிவந்துள்ள முதலாவது ஆய்வு நூல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: