யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, June 1st, 2018

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறைக்கான தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறையில் தனியார் பேருந்து ஊழியர் ஒருவரை பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தினார். அது தொடர்பில் பேருந்து ஊழியரால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஆனால் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடத்தியவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வலியுறுத்தியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (1) காலை தொடக்கம் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.

Related posts: