யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்விற்கு அனுமதி மறுத்தமையால் குழப்பம்!

Sunday, March 12th, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வினை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்தமையினால் பல்கலைக் கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலையின் கண்ணாடிகள் சிலரால்  உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை(11) பகல் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும், கலைப்பீட மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் பல்கலைக் கழகத்தில் பதற்ற நிலை அதிகரித்தமை காரணமாகப் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related posts: