யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் – அளவெட்டி கனி வைத்தியசாலையில் அறுமதி!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் நேற்றையதினம் (17) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அளவெட்டியைச் சேர்ந்த 37 வயதுடைய ஏ. ரதீஸ்வரன் என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் “அளவெட்டி கனி” என அழைக்கப்படுபவர் என்றும், குறித்த நபர் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த நபர் “வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு வந்தபோது, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூர் தேர்திருவிழாவை விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!
அரசாங்கத்தை எச்சரித்துள்ளது மருத்துவ நிபுணர்கள் பேரவை!
ஆயுள்வேத மருந்தகத்தை கெற்பேலிக்கு மாற்றுமாறு கோரிக்கை!
|
|