யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் பலி!
Tuesday, August 10th, 2021யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர்.
அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|