யாழ்ப்பாணத்தில் பாவனையாளர் சட்டத்தை மீறிய 943 வழக்குகளுக்கு 56 லட்சத்து .66 ஆயிரம் ரூபா அபராதம்!

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தினை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட 943 வழக்குகளுக்கு 56லட்சத்து 66 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி த. வசந்தசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உள் செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்கள், நகரங்கள் யாழ். மாநகர சபை பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொண்ட சட்ட நடவடிக்கை மூலம் கடந்த வருடம் 943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக காலாவதியான பொருட்கள் விற்பனை மற்றும் காட்சிப்படுத்தாமை, நிறை குறைந்த பாண் உற்பத்தி செய்தமை, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்கள் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் வர்த்தகர்களுக்கு எதிராக அந்தப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பருத்தித்துறை, மல்லாகம், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் இவ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும் தென்னிலங்ரகரய மையமாகக் கொண்டு எற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் ஜெலி நிறுவனம், பிஸ்கட் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக கடந்த வருடம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Related posts:
|
|