யாழ்ப்பாணத்தில் தொழிலாளர் தினம்

Monday, May 1st, 2017

உலகமெங்கும் உழைக்கும் மக்கள் இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுகின்றனர். யாழ்ப்பாணத்திலும் இதற்கான பலதரப்பட்ட அமைப்புகளால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதனை வெளிப்படுத்தும் வகையில் குடாநாட்டின் பல பாகங்களிலும் அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் என பலதரப்பட்டவர்களது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு தொழிலாழர் தினத்தை அனுஸ்டிக்கக்கோரி அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

 1886ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி 8 மணித்தியாலய பணி கோரியை அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் நடத்திய பேரணி சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

இந்த போராட்டப் பேரணி மே மாதம் 3ம் திகதி வரை இடம்பெற்றது. அதேவேளை அன்றைய தினம் சிக்காகோ பொலிசார் பேரணியின் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பொலிசாரின் அந்த தாக்குதலுக்கு  எதிர்ப்புத் தெரிவித்து 1886ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி சிக்காகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரணி அந்த சதுக்கத்தில் நிறைவு பெற்றது. அன்று அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே இன்று தொழிலாளர்கள் 8 மணித்தியாலம் வேலையை அனுபவிக்கின்றார்கள்.

அன்று பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்த தொழிலாளர்களை நினைவுகூருவதற்காக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1ம் திகதி உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென 1889ம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய 1890ம் ஆண்டில் சிலி நாட்டிலும் கியுபாவிலும் முதல் தடவையாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இலங்கையில் ஏ.ஈ.குணசிங்கவின் தலைமையிலான தொழிலாளர் கட்சியினால் முதல் தடவையாக 1927ம் ஆண்டில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது

Related posts: