யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன!

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலை மற்றும் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ். வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வகை-02 இனைச் சேர்ந்த அதிபர்கள் விண்ணப்பிக்காத சந்தர்ப்பத்தில் வகை-3 இனைச் சேர்ந்த அதிபர்களும், தற்போது அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெற்றுக் கொண்ட அதிபர் வகுப்பு-3 இனைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியுமென யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் நா.தெய்வேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களை யாழ். கல்வி வலயத்தின் பொது நிர்வாகக் கிளையில் பெற்று பூர்த்தி செய்த பின்னர் ஏப்ரல் மாதம்-06 ஆம் திகதிக்கு முன் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
Related posts:
குடாநாட்டில் ஈரக் காற்றினால் காய்ச்சல் பரவுகிறது!
அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல நடவடிக்கை - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜப...
புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!
|
|