யாழ்ப்பாணத்தில் இம்முறை உருளைக்கிழங்கு செய்கை அமோகம்!

யாழ்.குடாநாட்டில் தற்போதைய காலநிலைக்கு ஏற்றவாறு உருளைக்கிழங்கு பயிர்கள் பாதிப்பின்றி உள்ளதாக மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சில இடங்களில் நடுகை செய்யப்பட்ட விதை கிழங்குகள் முளைதிறன் அற்றும் காணப்படுகின்றன. இம்முறை கூடுதலான விவசாயிகள் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பரவலாக இச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் இந்த மாத இறுதியில் இச் செய்கைக்கான அறுவடையும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Related posts:
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழில் மரவள்ளிக் கிழங்குத் தானம்
தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கயந்த கருணாதிலக!
கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
|
|