யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அட்டூழியம்!

Thursday, December 23rd, 2021

யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச் சந்தியில் போட்டு சேதப்படுத்திவிட்டு குறித்த கும்பல் சென்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த வன்முறைக் கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக கோப்பாய் காவல்துறையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் சந்தியில் தொலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்தி வருபவரின் வீட்டிலே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: