யாழ்ப்பாணக் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவினரால் முறைசாராக் கல்வி தொடர்பான விபரங்கள் திரட்டல்!

யாழ்ப்பாணக் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவினரால் முறைசாராக் கல்வி தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணக் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவினரால் இந்தவிடயங்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய ஆவணப் புத்தகம் தயாரிக்கப்படவுள்ளமையால் பாடசாலை மட்டத்தில் பாடசாலைக் குழுக்களை அமைத்துள்ள விபரங்கள், 2016 ஆம் ஆண்டில் வரவு ஒழுங்கீனமான மாணவர்களின் விபரம், இடைவிலகிய மாணவர்களின் விபரம், பிறப்புச் சான்றிதழ் இல்லாது கல்வி கற்கும் மாணவர்களின் விபரம் போன்ற தகவல்கள் பாடசாலை ரீதியாகத் திரட்டப்பட்டு வருகின்றன.
குறித்த விபரங்களை எதிர்வரும்-27 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினர் கேட்டுள்ளனர்.
Related posts:
நாடாளுமன்றுக்கு ஒரே நாளில் 7,000 மாணவர்கள் வந்தனர்!
போதையில் மோட்டார்சைக்கிள் ஓடியவருக்கு இரண்டு மாத சிறை!
எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று 37 வருட சேவைக்கு ஓய்வு கொடுப்பதாக மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!
|
|