யாழில் மீண்டும் உயிர்த்தெழும் வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் வெட்டிபடுகொலை!

Monday, October 10th, 2016

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த கொலைச்சம்பவம் நேற்றுமுன்தினம் நாவற்குழி பாலம் அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை என்றும் 42 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நபர் வேலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Related posts: