யாழில் மாங்காய் பறிக்க முற்பட்ட குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்ததில் படுகாயம்  

Saturday, September 23rd, 2017
யாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டிப் பகுதியில் மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முற்பட்ட குடும்பஸ்தரொருவர் தவறுதலாக நிலத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ளார். நேற்று(22) பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைகளுக்காக யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுக் கறித் தேவைக்காகத் தனது  வீட்டு  வளவினுள் காணப்பட்ட மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முற்பட்ட போதே மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 52 வயதான குடும்பஸ்தர் கால் மற்றும் இடுப்புப் பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Related posts: