யாழில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்!

யாழ். சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உடுவில் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் இந்த வருடம் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் நா.தயாரூபன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் லயன்ஸ் கழகங்களின் இரண்டாவது மாவட்ட உப ஆளுநர் லயன் தேவா பீற்றர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். சித்தியடைந்த 120 வரையான மாணவர்கள் இதன் போது கேடயங்களும், சிறப்புப் பரிசில்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
குறித்த விழாவில் உடுவில் கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
Related posts:
நுளம்பு பெருக்கம்: மூவருக்கு தண்டம்!
A H1 N1 நோய் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை - சுகாதாரத் துறை!
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை!
|
|